ரஜினியுடன் இணையும் லோகேஷ் – அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

0
79
Article Top Ad

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 10ஆம் திகதி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து ‘ஜெய் பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படமான Thalaivar170ல் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.

இதற்கடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் அவரின் 171வது திரைப்படமான Thalaivar171-ஐ லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.