24வது கிராண்ட்ஸ்லாம் சாதனையை அமெரிக்க பகிரங்கப் போட்டிகளை வென்று நிலைநாட்டிய ஜோகோவிச்

0
128
Article Top Ad

 

அமெரிக்க பகிரங்க (US Open) சம்பியன் பட்டத்தை மீண்டுமாக சேர்பிய Tennis வீரர் நொவாக் ஜோகோவிச் கைப்பற்றியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் ரஷ்ய வீரர் டானில் மெட்வடேவைத் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்றார்.

இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் வென்றெடுத்த 24வது சம்பியன் பட்டமாகும்.

ஆடவர் பிரிவில் ஜோகோவிச்சே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரராக இருக்கும் அதேவேளை மகளிர் பிரிவில் அவுஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்க்கிரட் கோர்ட் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை நிலைநாட்டியிருந்தார்.

அந்த சாதனையை தற்போது ஜோகோவிச் சமன் செய்துள்ளார். 36வதுடைய ஜோகோவிச் தடுப்பூசி ஏற்றவில்லை என்ற காரணத்திற்காக 2022ம் ஆண்டில் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகள் மற்றும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கத்தடைவிதிக்கப்பட்டிருந்தார்.

அந்த தடங்கல்களைத் தாண்டி தற்போது சாதனையாளனாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது