ரஜினியுடன் மோதும் சிவகார்த்திகேயன்

0
82
Article Top Ad

இந்த ஆண்டு துவக்கத்திலேயே வாரிசு – துணிவு என இரு முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் படங்கள் மோதிக்கொண்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்ததால் விடுமுறை நாட்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், அதே போல் வருகிற ஆண்டும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ளது.

ஆம், 2023ல் பொங்கலுக்கு எப்படி வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் வெளிவந்ததோ அதே போல் வருகிற 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் இருந்தனர். பல முறை இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபோனது.

ஆனால், தற்போது உறுதியாக 2024 பொங்கலுக்கு அயலான் வரும் என அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படமும் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இரு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இவர்கள் மட்டுமின்றி அருண் விஜய்யின் வணங்கான், சுந்தர்.சி-யின் அரண்மனை 4 ஆகிய படங்களும் பொங்கலுக்கு தான் வெளியாகிறது.

ஒரு வேளை இதன்பின் இந்த பொங்கல் ரேஸில் இருந்து ஓரிரு திரைப்படங்கள் பின்வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் எந்தெந்த படங்கள் வெளியாகிறது.. எந்தெந்தெ படங்கள் வெளியேறுகிறது என்று.