இந்தியா – கனடா விவகாரத்தில் தலையிட்ட இலங்கை இராஜதந்திர நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம்

0
49
Article Top Ad

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனடாவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களால் இந்நாட்டு சிறுவர்கள் கனடாவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பிரச்சினை நீண்டகாலமாக காலமாக நிலவுகிறது. அதனை அந்த நாடுகள் தீர்த்துக்கொள்ளும்.

இந்த பிரச்சினையில் நடுவில் குதித்து தேவையற்ற கருத்தை வெளியிட்டு கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர சிக்கலை அலி சப்ரி உருவாக்கியுள்ளார்.

இதனால் கொழும்பில் உள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்பாக பெருமளவிலான இளைஞர்கள் விசாவிற்காக காத்திருப்பதாகவும் சாணக்கியன் எம்பி கூறியுள்ளார்.

அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்திய – கனடா விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையிலான கருத்து மோதலில் இலங்கை தலையிட்டுள்ளமை எதிர்காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.