திலீபனின் திருவுருவம் தாங்கிய ஊர்தி மீது தாக்குதல்; பிரித்தானியாவில் தமிழர்கள் எதிர்ப்பு

0
48
Article Top Ad

பிரித்தானியாவில் வெளிவிவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாகச் தமிழ் இனவழிப்பை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று பிரித்தானியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அநீதிகளை இழைப்பதாக குற்றம் சாட்டியுள்ள பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள், பிரித்தானிய அரசின் கவனத்திற்கு இவற்றை கொண்டுவரும் நோக்கிலேயே போராட்டம் நடாத்தப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசிய உணர்வை எந்த சக்திகளாலும் அடக்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் அவசியம் மற்றும் தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் தமிழ் மக்கள் என்றும் உறுதியாகப் பயணிப்பார்கள் என்ற செய்தியை பிரித்தானிய அரசிற்கும் உலகிற்கும் எடுத்துரைக்கும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளதாக பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பினர், மக்களவை அமைப்பினர் ஆகியோர் ஆங்கில உரைகளை வழங்கியிருந்தார்கள்.

வணக்கம் தமிழினத்தின் உயிர் காப்புப் போராட்டத்திற்கான அழைப்பு அடக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் போராளி ஒருவன் அகிம்சை வழியில் உயிரீந்து, உலகிற்கு ஈகத்தின் குறியீடாக விளங்குகின்றான்.

இலங்கையில் 8 வருடங்கள் சக்கர நாற்காலியில் பாடசாலை சென்ற மாணவியின் சாதனை
தியாக தீபம் திலீபனின் திருவுருவம் தாங்கிய ஊர்தியை அடித்து உடைத்ததுடன் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களையும் தாக்கி இனவாதத்தின் கோர முகத்தை காட்டியமைக்காக இந்த போராட்டத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு இதனைத் தெரியப்படுத்துவோம் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தெரிவித்தனர்.