இலங்கை பேரழிவின் விளிம்பில் நிற்கின்றது; சம்பந்தன் கவலை

0
30
Article Top Ad

பிரித்தானியர்கள் விட்டுச்சென்ற ஆட்சிப் பாணியைக் கைவிட்டு, அதனை திருத்த இலங்கை அரசு மறுக்கிறது. இதன் காரணமாக இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்வது கேள்விக்குறியாகிவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பற்றிக்குக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பறெ்றது.

இந்த சந்திப்பின் போதே இரா.சம்பந்தன் இதனை தெரிவித்தார்.

“பிரித்தானிய ஆட்சி இலங்கையிலிருந்து வெளியேறியபோது, பிரித்தானிய ஆட்சி முறையை இங்கும் கையளித்து விட்டுச் சென்றுவிட்டனர்.

அதன்பின்னர் பிரித்தானிய ஆட்சி தங்களது முறைமையை சீர்ப்படுத்திக்கொண்டது.

தொடர்ந்து ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் போன்ற நாடுகளுக்கும் தாராளமாக அதிகாரப் பகிர்வை வழங்கி, சீரான உச்ச ஆட்சி முறைமையை உருவாக்கி, குடிமக்களின் நெறிமுறையான வாழ்வை பிரித்தானியா உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால், பிரித்தானியர்கள் விட்டுச்சென்ற ஆட்சிப் பாணியைக் கைவிட்டு அதனை மறுசீரமைத்துக்கொள்ள இலங்கை அரசு மறுக்கிறது. இதன்மூலம் இலங்கை பேரழிவின் விளிம்பில் நிற்கின்றது. இந்த ஆட்சி முறைமையே மேலும் தொடருமானால் இங்கு ஒரு மக்கள் குழுமமாக தமிழர்கள் வாழ்வதென்பது சாத்தியப்பாடற்ற விடயமாக மாறிவிடும் ” என இரா.சம்பந்தன், பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டினார்.