காசாவில் நான்கு ஐ.நா. ஊழியர்கள் உயிரிழப்பு – எல்லை இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள்

0
43
Article Top Ad

இஸ்ரேல் இராணுவம் காசா மீது நடத்திய தாக்குதலில் நான்கு ஐ.நா. ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காசா பகுதிகள் இன்று இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஐ.நா. நிவாரண முகாம் சேதமடைந்துள்ளது. இதில் 9 ஐ.நா. ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்பகுதியில் 14 ஐ.நா. நிவாரண முகாம்கள் உள்ளன. இதில் ஒரு முகாம் மீது இன்று தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காசா எல்லைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் 5ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்தநிலையில், காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.கனரக இராணுவத் தளவாடங்களுடன் ரிசர்வ் படைகளும் அழைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் முன்னோடியில்லாத தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து பல கொலைகள் நிகழ்ந்த காசா எல்லைப்பகுதிகளின் கட்டுப்பாட்டை மீட்டுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அங்கு பல பகுதிகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பை இஸ்ரேல் இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதேபோல, அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களுடன் வந்த முதல் விமானம் இஸ்ரேலின் நேவடிம் விமானநிலையத்தில் இறங்கியுள்ளதை அந்நாட்டு இராணுவம் உறுதி செய்துள்ளது.

இந்த ஆயுதங்கள் ஒருகுறிப்பிடத்தகுந்த தாக்குதல் மற்றும் கூடுதல் பலத்தினை உருவாக்க பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேலுக்கு திடமான மற்றும் அசைக்கமுடியாத ஆதரவினை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில்,

“ஹமாஸ் தாக்குதல் தீய செயல். தேவைப்பாட்டால் இஸ்ரேலுக்கு கூடுதல் உதவிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறோம்.

இந்தச் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் நாடுகள், அமைப்புகளுக்கு சொல்ல என்னிடம் ஒரு வார்த்தை உள்ளது. அது, வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.