ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தால் இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது

0
78
Article Top Ad

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று புனேயில் இடம்பெற்றுவரும் தீர்மானமிக்கப் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது.

அதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி களமிறங்கியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பத்தும் நிசங்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திமுத் கருணாரத்ன 15 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.

குசல் மெண்டிஸ், பத்தும் நிசங்க ஜோடி ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாவது விக்கெட்டுக்காக 62 ஓட்டங்கள் இணைப்பாட்டம் பெறப்பட்டிருந்த வேளையில், பத்தும் நிசங்க 46 ஓட்டங்களுடன் தமது விக்கெட்டை பறிக்கொடுத்திருந்தார்.

குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க அடுத்துவந்த வீரர்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை.

அனுபவம்வாய்ந்த வீரரான அஞ்சலோ மெத்யூஸ் 23 ஓட்டங்களையும் மஹேீஸ் தீக்ஷன 29 ஓட்டங்ளையும் பெற்றுக்கொடுக்க இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன் பிரகாரம் 242 ஓட்டங்கள் ஆப்கானிஸ்தான் அணிக்குக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

242 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே நிதானமான அதிரடியை வெளிப்படுத்தியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹமதுல்லா குருபாஸ் ஓட்டங்கள் எதுவும் பெறாது பெவிலியன் திரும்ப இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா ஜோடி சிறந்த இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இப்ராஹிம் சத்ரான் 39 ஓட்டங்களையும், ரஹ்மத் ஷா 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 58 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிபெற செய்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க 2 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டி இலங்கை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இருந்தது. ஆனால், இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளதால் அரையிறுதி வாய்ப்பையும் இழந்துள்ளது.

இந்தப் போட்டி உட்பட அடுத்துவரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே இலங்கை அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஆனால், இந்த தோல்வியின் மூலம் அந்த சந்தர்ப்பம் இல்லாது போயுள்ளது.