22 வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர்

0
59
Article Top Ad

2024 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் அபார வெற்றி பெற்று தன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

அரை இறுதிப் போட்டியில் உலகின் முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிக்கை வீழ்த்தி இருந்தார் ஜானிக் சின்னர். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ்-ஐ சந்தித்தார். இந்தப் போட்டியில் 3-6இ 3-6இ 6-4இ 6-4இ 6-3 என்ற செட் கணக்கில் சின்னர் வெற்றி பெற்றார்.

தன் 22 வது வயதில் இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெற்றி பெற்று சாதித்து இருக்கிறார். மறுபுறம்இ டேனில் தொடர்ந்து மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்து இருக்கிறார். அதனால் அவர் சோகத்தில் இருந்தார்.

இந்தப் போட்டியில் முதல் இரண்டு செட்களையும் டேனில் கைப்பற்றி இருந்தார். ஆனால்இ விடாப்பிடியாக துரத்திய சின்னர் கடைசி மூன்று செட்களையும் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். ஒரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் முதல் இரண்டு செட்களை இழந்த பின் போட்டியை வென்ற எட்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் சின்னர்.