இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி: ஓய்வை அறிவித்த வனிந்து ஹசரங்க

0
20
Article Top Ad

இலங்கை கிரிக்கெட் அணி பங்ளாதேஷில் சுற்றுப்பயணம் செய்து 3 ரி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற ரி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் இரு அணிகளும் தல ஒரு போட்டியில் வெற்றிபெற்றன. இதனால் 1-1 என தொடர் சமனில் இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பங்ளாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க அனைத்துலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பங்ளாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.

வனிந்து ஹசரங்க இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.