முடிவுக்கு வந்தது தோனியின் சகாப்தம் : சென்னை அணிக்கு புதிய தலைவர்

0
23
Article Top Ad

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து அந்த அணியை எம்எஸ் தோனி வழிநடத்தி வந்தார்.

இந்நிலையிலேயே, இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை அணிக்கு புதிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதல் போட்டியில் சென்னை அணி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், போட்டி துவங்குவதற்கு முன்னரே எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்துள்ளார்.

ருதுராஜ் 2019 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகின்றார். இதுவரை அவர் 52 போட்களில் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கிண்ணத்தை வெற்றிக்கொண்டிருந்தது.

இதன் போது தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்னுமொரு ஆண்டு விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த தோனி, இந்த ஐபிஎல் சீசனில் புதிய ரோலில் இடம்பெறப் போவதாக கூறியிருந்தார். இந்நிலையிலேயே தலைமை மாற்றம் இடம்பெற்றுள்ளது.

சென்னை அணியில் தோனியின் தலைமைப் பயணம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சமூக ஊடகங்கள் #Dhoni என்ற ஹேஷ்டேக் வைரலாகியுள்ளது.