2024இல் நிலவும் வெப்பநிலையை அன்றே கணித்த பாபா வங்கா: 5079ஆம் ஆண்டில் உலகம் அழியும் எனவும் யூகம்

0
19
Article Top Ad

பல்கேரியாவைச் சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா 2024ஆம் ஆண்டு கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் பேரழிவு ஏற்படலாமென அப்போதே கணித்துள்ளார்.

பாபா வங்கா 1996ஆம் ஆண்டில் தன்னுடைய 85ஆவது வயதில் உயிரிழந்தார். இவருக்கு 12 வயதாக இருக்கும் போதே பல்கேரியாவில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் மின்னல் தாக்கி பார்வையை இழந்தார்.

இதன்போது அவருக்கு எதிர்கால காட்சிகள் மனதில் வருவதாகவும் அதனை கணிப்புகளாக பாபா வாங்கா எழுதியுள்ளார்.

அவருடைய கணிப்புகளில், 2024ஆம் ஆண்டு கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் பேரழிவு ஏற்படலாமென கணித்துள்ள நிலையில் அண்மையில் வெளியான அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உலகளாவிய வெப்ப அலைகள் 67 வீதம் அடிக்கடி நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு அவர் உயிரிழக்கும் போது இணைய சேவை ஆரம்ப நிலையில் இருந்தாலும் 2024ஆம் ஆண்டு சைபர் தாக்குதல்கள் பெருமளவு நடைபெறும் என்பதை அவர் கணித்திருந்தார்.

இதுவும் அவரது குறிப்பிடத்தக்க கணிப்புகளில் ஒன்றாக இருந்த நிலையில் கடந்த 12 மாதங்களில் ஆப்பிள் மற்றும் எக்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் இணைய பாதுகாப்பு மீறல் பிரச்சினைகளை சந்தித்திருந்தது.

2024 ஆம் ஆண்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, உலக பொருளாதார சக்தியின் மாற்றங்கள், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பிரச்சனைகள் மற்றும் அதிகரித்து வரும் கடன் பிரச்சினைகள் ஆகியவற்றையும் பாபா வங்கா முன்னரே கணித்து கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தொடர்ச்சியான பண வீக்கத்துடன் போராடி வருவதுடன் மந்தமான உள்நாட்டு நுகர்வு காரணமாக 2023ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் ஜப்பான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

சீனாவும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்ற நிலையில் இவை யாவும் பாபா வங்காவின் கணிப்புகளை உண்மையாக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதே போல ஐரோப்பாவில் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்தும் பாபா வங்கா எச்சரித்துள்ளதோடு முக்கிய நாடு ஒன்று உயிரியல் ஆயுதங்களை சோதனை அல்லது தாக்குதலுக்கு பயன்படுத்துமெனவும் 2024ஆம் ஆண்டு தொடர்பாக பாபா வங்கா கணித்துள்ளார்.

இதேவேளை, அவரது கணிப்பின்படி, 5079ஆம் ஆண்டில் உலகம் அழியும் என்று கூறப்படுவதால் அவரது கணிப்புகள் 5079இல் நின்று விடும் என்றும் சமூக வலைதளங்களில் பரவலடைந்து வருகின்றது.

இந்நிலையில், உலகின் நடந்த பல்வேறு சம்பவங்கள் இவர் கணித்தது போலவே நடந்துள்ளன. உதாரணமாக அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு, ஜப்பான் சுனாமி மற்றும் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை இவர் துல்லியமாக கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.