உலகமெங்கும் நாளை வெளியாகும் ‘இந்தியன் 2’

0
81
Article Top Ad

லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளைய தினம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், படத்திற்கான டிக்கெட்டுக்கள் மும்முரமாக விற்பனையாகி, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

லைக்கா புரொடக்ஷனின் ஸ்தாபகத் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூரியா, காஜல் அகர்வால், சமுத்திரகனி, விவேக், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், முத்துராஜ் கலைவடிவமைப்பை மேற்கொண்டுள்ளார்.

மேலும், இயக்குநர் ஷங்கருடன் முதன்முறையாக இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இந்தியன் 2 மூலம் கூட்டணி அமைத்துள்ளார்கள்.

சுமார் 6 வருட உழைப்பின் பலனாக நாளைய தினம் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்திற்கான டிக்கெட்டுக்கள் மும்முரமாக தற்போது விற்பனையாகி வரும் நிலையில், இந்தப் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.