ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் சூழ்ச்சி

0
14
Article Top Ad

” ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 2009 இல் இருந்து முயற்சித்துவருகின்றனர். அறகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்தது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2015 பொதுத்தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ச இருக்கவில்லை. எனினும், கட்சியின் அழைப்பின் பிரகாரமே 2015 தேர்தலில் அவர் போட்டியிட்டார். இம்முறை போட்டியிடமாட்டார் என்ற முடிவிலேயே மஹிந்த ராஜபக்ச ஆரம்பம் முதலே இருந்தார். அந்தவகையிலேயே அவர் ஒதுங்கினார்.

இம்முறை தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கும் முடிவில் நான் இருந்தேன். கட்சி விடுத்த கோரிக்கையால், நாடு முழுவதும் கட்சி உறுப்பினர்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளதால் பெயர் தேசிய பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு 2009 ஆம் ஆண்டிலிருந்தே உலகில் இருந்து குழுவொன்று முயற்சித்துவருகின்றது. ராஜபக்சக்களின் அரசியலை வீழ்த்துவதற்கு புலி டயஸ்போராக்கள் முயற்சித்துவருகின்றனர்.

அறகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. அறகலயவில் உண்மையான போராட்டக்காரர்களும் இருந்தனர். ஆனால் ஓர் அங்கமாக சூழ்ச்சி திட்டமும் இருந்தது.
டயஸ்போராக்களில் சிலர் இன்று அரசியலுக்கும் வந்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்துக்கு டயஸ்போராக்களின் ஆதரவு வழங்கினர். ராஜபக்சக்களை வீழ்த்துவதற்காகவே இந்த ஆதரவு வழங்கப்பட்டது.” – என்றார்.