நாளுக்கு நாள் வசூல் வேட்டையில் சிவகார்த்திகேயனின் அமரன்

0
22
Article Top Ad

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் அமரன்.

கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இப்படத்திற்கு மோசமான விமர்சனம் கொடுக்க யாருக்குமே மனம் வரவில்லை. மாறாக படத்தை பார்த்து கண்ணீர்விட்டு இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இப்படத்திற்காக பணியாற்றிய அனைவருக்குமே ஒரு சல்யூட் என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள். காரணம் இது படம் அல்ல, ஒரு நிஜ வீரரின் வாழ்க்கை பயணம்.

வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு மக்கள் பெரிய ஆதரவு கொடுக்க வசூலிலும் கலக்கி வருகிறது.

6 நாள் முடிவில் மொத்தமாக படம் இதுவரை ரூ. 163 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.இந்தப் படம் இவ்வார இறுதியில் 200 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 200 வசூல் செய்தால் சிவகார்த்தியேனின் முதலாவது 200 கோடி வசூல் படமாகவும் இது அமையும்.