Article Top Ad
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமைக்கு பகிடிவதையே காரணம் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அந்த பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஆவர். சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் விசாரணையின் பிரகாரம் இவர்கள் கைதாகியுள்ளனர்.
இதேவேளை, மாணவனை பகிடிவதைக்கு உள்ளாக்கியதை உறுதிப்படுத்தி, 9 மாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு 18 புதுமுக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்படுகின்றது.

