ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து அவசர கலந்துரையாடல்

0
169
Article Top Ad

அமெரிக்காவால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா முன்னர் விதித்த வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைத்ததைத் தொடர்ந்து அரசாங்கம் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, அந்த. செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்தியதாக ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு, நேற்று அந்நாட்டு தலைவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதற்கு ஒரு சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. அந்தக் காலம் நேற்று (9) முடிவடைந்த நிலையில், புதி வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னதாக விதிக்கப்பட்ட 44% வரியை 30% ஆக குறைத்தது நேர்மறையான அணுகுமுறை என இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.