விளக்கமறியலில் வைக்கப்பட்டார் ராஜித சேனாரத்ன

0
70
Article Top Ad

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (29) அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ராஜிதவை கைது செய்வதற்கான பிடியாணை ஏற்கனவே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் அதுவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.