தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திசாநாயக்கவிடம் காணப்பட்ட கோப்புக்கள் எங்கே என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்தோடு, நாட்டை கட்டியெழுப்ப ரணில்-சஜித் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரை மக்களே மீளவும் தேடும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் அதற்கு அரசின் செயற்பாடுகளே காரணம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பண்டாரவளையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாது போயுள்ளதாக தெரிவித்த சமிந்த, ராஜபக்ஷக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் தோல்வி கண்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். குறிப்பாக அன்று ரொக்கட் மூலம் நட்டம் ஏற்பட்டதென கூறியவர்கள், இன்று இலாபம் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். இங்கு அரசியல் ரீதியான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த அநீதிக்கான நீதியை பெற, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

