எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்துவரும் கலந்துரையாடல்களின் அடிப்படையில், இனி ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளது.
கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வெளியிட்ட அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக எதிர்க்கட்சிகளுடன் பல்வேறு பொதுவான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் சில முக்கிய அம்சங்களில் இணக்கம் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இணக்கப்பாடுகளை செயற்படுத்தும் நோக்கில், ஐ.தே.க, ஐ.ம.ச மற்றும் பிற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற சிறப்பு குழு அல்லது இதே போன்ற பொறிமுறையை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்கால நடவடிக்கைகளில் வெளிப்படையான முறையில் பணியாற்றுவதைத் தனது கட்சி உறுதி செய்துள்ளதாகவும் அபேவர்தன வலியுறுத்தினார்.

