சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடாவேண்டாம் – சஜித்

0
58
Article Top Ad

கடந்த காலங்களில் நாட்டின் வங்குரோத்து நிலை காரணமாக 260,000 தொழில்முனைவோர் சிரமத்திற்கு ஆளானார்கள் என்றும், இப்போதாவது சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடாமல் செயற்படுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“அரசாங்கம் நுண் பொருளாதாரம், பேரண்ட பொருளாதாரம் குறித்து சிந்திப்பது போலவே, தனிநபர்கள், குடும்பங்கள், தொழில்முனைவோர் மற்றும் வியாபாரிகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். இன்றும் கூட, நுண் பொருளாதாரத்தில் தனிநபர், சமூகம் மற்றும் குடும்ப அலகுகள் அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றன. அரசாங்கம் ஏற்றுமதிக்கு உகந்த கொள்கையைப் பின்பற்றினால், சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடி ஒக்டோபர் 1 முதல் இலகுபடுத்த ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT) ஐ நீக்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

தேர்தலின் போது வாக்குறுதியளித்த பிரகாரம், புதிய IMF இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தால் ஏற்றுமதிக்கு உகந்த SVAT தக்கவைக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், அது இன்று நீக்கப்படும் நிலையே காணப்படுகின்றது. இது ஏற்றுமதியாளர்களுக்கு பணப்புழக்க சிக்கலை உருவாக்குகின்றமை இதன் பாதக அம்சமாக காணப்படுகின்றன. தாமதங்கள் நேரத்தை வீணடிக்கும், செயல்திறனைக் குறைக்கும், நிர்வாகச் செலவுகளை அதிகரிக்கும், ஏற்றுமதித் துறையில் போட்டியிட வாய்ப்புள்ள பிற நாடுகள் இந்தப் பிரச்சினையில் விரைந்து செயல்படும் நிலை எமக்கு பாதகமாக அமையும். நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்குக் கூட மூலதனப் பிரச்சினைகளை இது உருவாக்கும்.

VAT இணக்கத்தையும் வரி அறவீட்டையும் அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிபந்தனையை IMF 2024 ஜூன் விதித்துள்ளது. காலாண்டுக்கு ஒருமுறை பெற்றுத் தரும் 2.9 பில்லியனுக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நமது நாட்டில் ஏற்றுமதியாளர்கள் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இறுதி நேரத்திலேனும் IMF உடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும், டிஜிட்டல் மயமாக்கல் நிறைவுறும் வரையும் இதை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.