கேபிள் கார் விபத்து – மற்றுமொரு பிக்குவும் உயிரிழப்பு

0
72
Article Top Ad

குருநாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பிக்கு இன்று (28) உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே 7 பிக்குகள் உயிரிழந்த நிலையில், இன்று இன்னுமொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு பிக்குகளும் அடங்குகின்றனர்.

மேலும், 5 பிக்குகள் காயங்களுடன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடும் குறித்த கேபிள் காரில் ஒரு தடவையில் சுமார் 10 பேர் மாத்திரமே பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது 13 பேர் பயணித்துள்ளனர். இதனால் பாரம் தாங்க இயலாமல் கேபிள் அறுந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.