Article Top Ad
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்ரமசிங்கவும் இன்று (28) சந்தித்துக்கொண்டனர்.
தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்க கதிர்காமத்திலிருந்து கொழும்பு திரும்பியபோது இந்த விஜயம் இடம்பெற்றதாக ஐ.தே.க.வின் உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் சிறையில் இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ரணில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உடல்நிலை குறித்தும் விசாரித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

