Article Top Ad
நாட்டில் புற்றுநோய் மற்றும் பிற தொற்றாத நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாளொன்றிற்கு சுமார் 100 புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுவதாகவும், வருடாந்தம் இந்த எண்ணிக்கை சுமார் 35000 என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான சிகிச்சைக்கு பாரியளவில் செலவாகுவதாக தெரிவித்த அமைச்சர், சுகாதார துறைக்கான மொத்த ஒதுக்கீட்டில் சுமார் 30 சதவீதம் புற்றுநோய் சிகிச்சைக்காக மாத்திரம் செலவாவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, தொற்றா நோய்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், இவற்றை தடுப்பதற்கு ஆரம்பக்கால கண்டறிதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

