கடும் போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்ற கெமரூன் தேர்தலில், 92 வயதான ஜனாதிபதி பால் பியா மீண்டும் வெற்றிபெற்றதாக, அந்நாட்டு அரசியலமைப்புச் சபை (Constitutional Council) அறிவித்துள்ளது.
அவர் 53.7% வாக்குகள் பெற்றுள்ளதோடு, அவரது முக்கிய போட்டியாளரான இஸா பாகரி 35.2% வாக்குகளை பெற்றுள்ளார்.
உலகின் மூத்த தலைமை அதிகாரியாகக் கருதப்படும் பியா, தற்போது எட்டாவது தடவையாக தொடர்ச்சியாக இந்த பதவியை வகிக்கிறார். அவர் முதலில் 1982 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்தார்.
தேர்தல் வெற்றி குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, கலவரம் ஏற்படும் பயத்தால் மக்கள் வெளியே வரவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
வணிக மையமான டூஆலா நகரில் பாதுகாப்பு படையுடன் நடந்த மோதல்களில் குறைந்தது நால்வர் பேர் உயிரிழந்துள்ளனர்.
போராட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள போதும், ஆங்காங்கே எதிர்த்தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

