சீரற்ற காலநிலை: உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு – 25 மாவட்டங்களில் 3.7 இலட்சம் பேர் பாதிப்பு

0
48
Article Top Ad

நாட்டில் தொடர்ச்சியாக காணப்படும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 203 பேர் காணாமல் போயுள்ளதாகவும் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

சீரற்ற காலநிலையின் தாக்கத்தால் 25 மாவட்டங்களைச் சேர்ந்த 234,503 குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 833,985 பேர் பாதிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 34,119 குடும்பங்களைச் சேர்ந்த 122,822 பேர் தற்போது 919 பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. கண்டி, நில்லம்பே பகுதியில் மட்டும் நேற்று (28) 431 மில்லிமீட்டர் மழை பொழிந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கேகாலை மாவட்டத்தின் டொத்தெலு ஓயா தோட்டப் பகுதியில் 277.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் பொக்கணை பகுதியில் 274 மில்லிமீட்டர் மழை பெய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.