டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்திற்கான பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு, இரண்டு C-130J Super Hercules விமானங்களும், அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலை பதிலளிப்பு குழுவைச் (CRG) சேர்ந்த வீரர்களும் இன்று கட்டுநாயக்க விமானத்தளத்தை வந்தடைந்தனர்.
அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த குழுவினரை அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. அருண ஜயசேகர ஆகியோர் வரவேற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருள்களை விநியோகிப்பதற்கான பணிகளை குறித்த குழு தொடங்கியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் அடையாளம் கண்ட பகுதிகளுக்கு அவசர போக்குவரத்து மற்றும் ஏனைய உதவிகளை இந்தக் குழுவினர் வழங்குவர் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

