‘டிட்வா’ புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சேதங்களை சமாளிக்க இலங்கை அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழ் கோரிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிக்கான கோரிக்கையை முன்னுரிமைப்படுத்த சர்வதேச நாணய நிதியம் (IMF) தீர்மானித்துள்ளது.
IMF வெளியிட்ட தகவலின்படி, இந்த அவசர நிதியுதவி, இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் வழங்கப்படும் கடன் திட்டத்திற்கு மேலதிகமாக வழங்கப்படும் தனிப்பட்ட நிதி ஆதரவாகும். மேலும், விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் நாட்டிற்கான ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர, IMF குழுவொன்று 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டிட்வா’ புயல் பின்னணியில், நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர அவசரமாக 200 மில்லியன் அமெரிக்க டொலர் தேவையென இலங்கை முன்வைத்த கோரிக்கை தற்போது IMF மூலம் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக, அந்நிறுவனத்தின் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் எவன் பப்பஜோர்ஜியோ கடந்த வெள்ளிக்கிழமை விளக்கமளித்திருந்தார்.

