ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு 4.5 மில்லியன் டொலர் நிவாரணம்

0
80
Article Top Ad

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு வழங்கும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரூ உறுதி செய்தார்.

அதன் பிரகாரம், ஐக்கிய நாடுகள் சபை உடனடி நிவாரண நிதியின்கீழ் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர், அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிதி மூலம் உணவுப் பாதுகாப்பு, வீடமைப்பு, குடிநீர், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக OCHA அமைப்பின் 5 பேர் கொண்ட மதிப்பீட்டு குழு இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.