இலங்கைக்கு மேலும் பல சர்வதேச உதவிகள்

0
52
Article Top Ad


டிட்வா புயலால் இலங்கையில் உருவான மோசமான இயற்கை அனர்த்த சூழ்நிலைக்கு பிந்தைய மீட்பு முயற்சிகளை ஆதரிக்கும் வகையில், ரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அவசர மனிதாபிமான உதவிகளை அறிவித்துள்ளன.

இலங்கைப் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன், 35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் கூடிய ரஷ்ய விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளதாக இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர இன்று (10) அதிகாலை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 1.8 மில்லியன் யூரோ அவசர மனிதாபிமான நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணம், பாதுகாப்பான தங்குமிடம், மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1.8 மில்லியன் யூரோவில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பின் அவசர நிதியத்தின் மூலம் வழங்கப்படும் 500,000 யூரோவும் அடங்கும்.