Article Top Ad
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.
அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால், அந்நாட்டு நேரப்படி காலை 11.44 மணியளவில், சுமார் 20 கிலோமீற்றர் (12 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ள ஜப்பானிய வானிலை ஆய்வு மையம், கடல் அலைகள் 1 மீற்றர் (39 அங்குலம்) உயரம் வரை செல்லக்கூடும் என எச்சரித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமையும் இதே பிராந்தியத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவானமை குறிப்பிடத்தக்கது.

