4 மாவட்டங்களில் 33 பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

0
88
Article Top Ad

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழையால், 4 மாவட்டங்களைச் சேர்ந்த 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் இச்சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர கூறினார். மேலும், நேற்று மீகஹகிவுல மற்றும் தெமோதரப் பகுதிகளில் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியிருப்பதாலும், மக்கள் தொடர்ந்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், ஆபத்து நிலையை கருத்தில் கொண்டு, 5 மாவட்டங்களின் 38 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட ‘அவதானம்’ (Level 2) எச்சரிக்கையும், 3 மாவட்டங்களின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட ‘விழிப்புடன் இருங்கள்’ (Level 1) எச்சரிக்கையும் தொடர்ந்தும் செயற்பாட்டில் உள்ளன.

நவம்பர் 20 முதல் இன்று (12) வரை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2,716 ஆபத்து மதிப்பீடு கோரிக்கைகள் கிடைத்துள்ளன. அவற்றில் 589 இடங்களின் ஆய்வுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இந்நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் இருப்பதே சிறந்தது என அவர் எச்சரித்தார்.

மட்டம் 3 – வெளியேறுங்கள் (சிவப்பு எச்சரிக்கை)

கண்டி மாவட்டம்:
உடுநுவர, கங்கவட்ட கோரள, உடுதும்பர, தோலுவ, மினிபே, பாதஹேவாஹெட்ட, மெததும்பர, தெல்தொட்ட, அக்குரணை, கங்கஇஹல கோரல, பாததும்பர, யட்டிநுவர, தும்ப்பனே, உடுநுவர, ஹாரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய, பஸ்பாகே கோரல, பன்வில, ஹதரலியத்த, குண்டசாலை

கேகாலை மாவட்டம்:
யட்டியாந்தோட்டை

குருநாகல் மாவட்டம்:
ரிதிகம, மல்லவப்பிட்டி, மாவத்தகம

மாத்தளை மாவட்டம்:
நாவுல, ரத்தோட்டை, அம்பகங்க கோரல, உக்குவளை, வில்கமுவ, யட்டவத்தை, மாத்தளை, பல்லேபொல, லக்கல பல்லேகம

மட்டம் 2 – அவதானமாக இருங்கள் (Amber)

பதுளை மாவட்டம்:
பதுளை, ஹப்புத்தளை, ஹாலிஎல, கந்தகெட்டிய, பசறை, மீகஹகிவுல, ஊவா பரணகம, வெலிமடை, லுணுகலை, எல்ல, பண்டாரவளை, சொரணாதொட்ட, ஹல்துமுல்ல

கேகாலை மாவட்டம்:
தெஹியோவிட்ட, தெரணியகலை, ருவன்வெல்ல, கேகாலை, கலிகமுவ, வரக்காபொல, மாவனெல்லை, ரம்புக்கனை, அரநாயக்க, புளத்கொஹுபிட்டி

குருநாகல் மாவட்டம்:
பொல்கஹவெல அலவ்வ

நுவரெலியா மாவட்டம்:
நுவரெலியா, அம்பகமுவ கோரல, தலவாக்கலை, நோர்வுட், கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, வலப்பனை, ஹங்குரான்கெத்த, நீலதண்டாஹின்ன, மதுரட்ட

இரத்தினபுரி மாவட்டம்:
கஹவத்தை, கொடக்கவெல, கொலன்ன

மட்டம் 1 – விழிப்புடன் இருங்கள் (மஞ்சள்)

கம்பஹா மாவட்டம்:
அத்தனகல்ல, திவுலப்பிட்டிய, மீரிகம

குருநாகல் மாவட்டம்:
நாரம்மல

இரத்தினபுரி மாவட்டம்:
கிரியெல்ல, இரத்தினபுரி, எஹெலியகொட, குறுவிட்டை, எலபாத்த, அயகம, பலாங்கொடை, கலவானை, ம்புல்பே, நிவித்திகலை, ஓப்பநாயக்க, பெல்மதுளை, கல்தோட்டை