Article Top Ad
இலங்கையில் நிலவும் பொது அவசரகால சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே அமுலில் உள்ள பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிக்கும் வகையில், ஜனாதிபதியின் செயலாளர் இன்று (28) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நாட்டின் இயல்பு நிலையைப் பேணுவதற்கும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்குமான நோக்கில், இந்த பொது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

