Thursday, 19 November 2026
நாணய மாற்று 🍁 1 CAD
  • Rs LKR 232.27 ▼ 0.23%
  • ₹ INR 65.23 ▼ 0.24%
  • $ USD 0.6982 ▼ 0.19%
  • € EUR 0.6363 ▲ 0.02%
  • £ GBP 0.5307 ▲ 0.15%
  • A$ AUD 1.0390 ▲ 0.07%
புதுப்பிப்பு: 2026-11-18 23:13
வானிலை
4°C
மேகமூட்டம்
▲ 15° ▼ 3°
  • உணர்வு1°
  • ஈரப்பதம்77%
  • காற்று6 km/h
அண்மைச் செய்திகள்
கனடாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து கனடா முழுவதும் இன்று அவசர எச்சரிக்கை ஒலி சோதனை சீனாவில் ட்ரம்பைச் சந்தித்த பிரதமர் மார்க் கார்னி – 20 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தை வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்கக் கோரும் எதிர்க்கட்சி – மூன்றாவது நாளாக விவாதம் கனடா முழுவதும் இன்று அவசர எச்சரிக்கை ஒலி சோதனை  ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் அளிக்கும் அபூர்வ கௌரவம் – இனி 7ஆம் இலக்கம் கூட மாறுகிறது! தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார் 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மைக்ரோசொப்ட் சேவைத் தடை — ரொறன்ரோ மருத்துவமனைகளிலும் மின்னஞ்சல் பாதிப்பு ஜென்சன் ஹுவாங் குறித்த செய்தியால் கவனம் பெற்ற கிம்பர்லி பவல் யார்? ஆர்க்டிக் பகுதியில் எண்ணெய், எரிவாயு அகழ்வுக்கு தடை – நீக்குவது குறித்து இன்னும் முடிவில்லை ; மார்க் கார்னி

அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் அறிவிப்பு

பகிர்FacebookWhatsAppXTelegram

அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஈரான், அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய ஈரானில் பறந்த அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை F-35 ரக போர் விமானம், ஈரான் விமானப் படையின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு விமானம் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்ததாகவும், அப்போது ஏற்பட்ட பெரு வெடிப்பைக் கருத்தில் கொண்டால், விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை மும்பையில் உள்ள ஈரான் தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது. எக்ஸ் பதிவில் இதுகுறித்து தெரிவித்துள்ள மும்பையில் உள்ள ஈரான் தூதரகம், ‘எதிரியின் மற்றொரு F-35 விமானம் நமது உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஈரான் ஒரு வலிமையான சக்தி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் 19ஆம் திகதி அமெரிக்காவின் F-35 விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இத்தகைய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு தாங்கள்தான் என அப்போது ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இதனிடையே, குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரானின் ஆளில்லா விமானங்கள் தாக்கின. இதனை உறுதி செய்த குவைத் அரசுக்குச் சொந்தமான குவைத் பெட்ரோலியம் கார்பரேஷன், இந்த தாக்குதலால் அங்கு பலத்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே பலமுறை தாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேற்கசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தரேஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘எனது செய்தி தெளிவானது. மனிதர்களுக்கு அளவற்ற துன்பத்தை விளைவித்து, பொருளாதார பேரழிவுக்கான விளைவுகளைத் தூண்டும் இந்த போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்த வேண்டும். போரை நிறுத்த இதுவே சரியான தருணம். அதேபோல், ஈரான் தனது அண்டை நாடுகளை தாக்குவதை நிறுத்த வேண்டும்.

தலைவர்கள் அழிவை விடுத்து, உரையாடலைத் தேர்ந்தெடுக்கும்போது மோதல்கள் முடிவுக்கு வரும். அதை தேர்வு செய்வதற்கான தருணம் இன்னமும் இருக்கிறது. அதை இப்போதே செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.