இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா

0
1
Article Top Ad

இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.

அவற்​றின் பெறுமதி இந்திய மதிப்பில் 133 கோடி ரூபா என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட பழங்​கால சிலைகள், புராதன பொருட்​கள் அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களுக்கு காலனித்துவக் காலத்தில் கடத்​தப்​பட்டிருந்தன.

பிரதமர் நரேந்​திர மோடி வெளி​நாடு​களுக்கு பயணம் மேற்​கொள்​ளும்​போது, பழங்​கால அரிய பொருட்​களை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்​கு​மாறு குறித்த நாடு​களின் அரசுகளிடம் வலி​யுறுத்தி வந்திருந்தார்.

அதன் பிரகாரம் ​இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்டு அமெரிக்கா​வுக்கு கடத்​தப்​பட்ட 657 பழங்​கால சிலைகள், அரிய பொருட்​கள் திருப்பி அளிக்​கப்​பட்டுள்​ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 28 ஆம் திகதி நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் இந்​திய தூதரக அதி​காரி ராஜலட்​சுமி கடாமிடம் இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here