பிரித்தானியாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகரிக்கும் நிலை

0
1
Article Top Ad

பிரித்தானியாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகரிக்கும் நிலை அதிகமாக உள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இயற்கையாகவே மக்கள் தொகை வளர்ச்சி  குறைந்து வருவதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் கூறியுள்ளது.

குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது, முதியோர் மக்கள் தொகை அதிகரித்தல், வாழ்க்கைச் செலவுகள் உயர்வு காரணமாக குடும்பங்கள் குழந்தை பெறுவதில் தயக்கம் காட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு மக்கள் தொகை வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் தேசிய புள்ளிவிவர அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக இளம் தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தை பெறும் முடிவுகளை தாமதமாக எடுப்பதால் இந்த சூழல் உருவாகியுள்ளதாகவும் தேசிய புள்ளிவிவர அலுவலகம் கூறியுள்ளது.

இந்த போக்கு தொடர்ந்தால் தொழிலாளர் பற்றாக்குறை, ஓய்வூதிய அமைப்புகள் மீது அதிக அழுத்தம், அரசின் சமூக பாதுகாப்பு செலவுகளில் அதிகரிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தம் போன்ற நீண்டகால சவால்கள் உருவாகக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here