ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 8 புள்ளிகளை பாகிஸ்தான் இழந்துள்ளது

0
2
Article Top Ad

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 8 புள்ளிகளை பாகிஸ்தான் இழந்துள்ளது.

டாக்கா மிர்பூர் ஷியரே பங்ளா விளையாட்டரங்கில் பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின்போது மந்தகதியில் ஓவர்களை வீசிய குற்றத்திற்காக ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 8 புள்ளிகளை பாகிஸ்தான் அபராதமாக இழந்துள்ளது.

அத்துடன், பாகிஸ்தானுக்கு போட்டி கட்டணத்தில் 40 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி ஈட்டிய பாகிஸ்தான் அணிக்கு ஐசிசியால் 12 டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால், இம் மாதம் 8ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை நடைபெற்ற பங்களாதேஷுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட ஒவர்களை நிறைவுசெய்யத் தவறியமையக்காக 8 புள்ளிகள் கழிக்கப்பட்டுள்ளன.

தற்போது பாகிஸ்தானுக்கு 3 போட்டிகளில் 4 புள்ளிகளே மிஞ்சியுள்ளது.

பாகிஸ்தான் அணித் தலைவர் ஷான் மசூத் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதங்களையும் ஏற்றுக்கொண்டதால் சம்பிரதாயபூர்வ விசாரணைகள் இடம்பெறவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here