கோடீஸ்வர தமிழ் வர்த்தகர் டினேஷ் ஷாஃப்டரின் மரணம் தற்கொலையா?

0
122
Article Top Ad

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தற்கொலையா என்பது தொடர்பில் தற்போது சிஐடியினரின் கவனம் திரும்பியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மரணம் தொடர்பாக ஏற்கனவே சுமார் 70 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

பிரபல தொழிலதிபரும் நிறுவன இயக்குனருமான தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

ஷாஃப்டர் தனது மாமியாருக்கு எழுதிய கடிதத்தில், ‘இத்தகைய நல்ல மகளை வளர்த்த அம்மாவுக்கு மிக்க நன்றி’ போன்ற உணர்ச்சிகரமான கருத்துகள் அடங்கிய கடிதத்தின் மீது சிஐடியினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

தினேஷ் ஷாப்டர் பயணித்த காரில் எவரும் பயணிக்கவில்லை என்பதற்கான தெளிவான ஆதாரம் சிசிடிவி காட்சிகளில் காணப்பட்டாலும், அதில் இருந்தவை குறித்து நீண்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும்இ ஷாஃப்டர் தனது மனைவியுடன் இங்கிலாந்து செல்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர்இ கடந்த 15ஆம் திகதி பொரளை மயானத்துக்குச் சென்றுள்ளார்.

மேலும், அவரது கார் இருந்த இடம் குறித்தும் கவனம் செலுத்திய புலனாய்வாளர்கள், மயானத்தின் ‘அனாதை பக்கம்’ என அழைக்கப்படும் பகுதியை மூன்று பக்கமும் உள்ளடக்கிய இடமாக அடையாளம் கண்டுள்ளனர்.

பல நிறுவனங்களின் உரிமையாளரான தினேஷ் ஷாப்டர், பல கோடி ரூபாயை வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்துள்ளார், ஆனால் எதிர்பார்த்தபடி பணத்தை மீளப்பெற முடியாமல் நாளுக்கு நாள் அவரது வியாபாரம் நஷ்டமடைந்து வருவது தெரியவந்துள்ளது.

நுவரெலியா பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 300 கோடி ரூபா பெறுமதியான காணி ஒன்று மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், யாழ்பாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து மேற்கொண்ட வியாபாரம் ஒற்றிற்காக 85 கோடி ரூபாவை

முதலீடு செய்துள்ளதாகவும், கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸுக்கு வழங்கப்பட்ட 160 கோடி ரூபாய் தொடர்பான தகராறு, உள்ளடங்களாக தோல்வியடைந்த வர்த்தக பரிவர்த்தணைகளில் அவருக்கு 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் வசிக்கும் குருந்துவத்தை மல் வீதியில் உள்ள வீட்டை விற்பனை செய்வதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியாகியிருந்தமை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.