இம்முறை ஒலிம்பிக் போட்டிகள் இரசிகர்கள் இன்றி மூடப்பட்ட கதவுகளின் பின்னால் நடைபெறலாம் என டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் ஷேய்கோ ஹஸிமோட்டோ தெரிவித்தார்.
போட்டிகள் பாதுகாப்பானதாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
போட்டிகளில் பங்கேற்றும் வீரவீராங்கனைகளையும் ஜப்பானிலுள்ள மக்களையும் முற்றுமுழுதாக பாதுகாக்கும் இடத்தே ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமானவை எனக் கூறமுடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டமையையிட்டு மக்கள் மகிழ்ச்சியடைவர்கள் எனத் தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2020ம் ஆண்டு நடைபெறவேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக இவ்வாண்டு ஜுலை 23ம் திகதி முதல் ஓகஸ்ற் 8ம்திகதி வரை நடைபெறவுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்கள் பங்கேற்றத்தடைவிதிக்கப்பட்டது. தற்போது ஜப்பானில் 2வது அலை காரணமாக உள்நாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பான தீர்மானம் ஜுன் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.