கடனை திருப்பி செலுத்த இலங்கைக்கு அவகாசம் வழங்க தயாராகும் இந்தியா!

0
119
Article Top Ad

நிதிச் சுமையைக் குறைக்கவும் இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 12 வருடங்கள் வரை கால அவகாசத்தை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கூட்டுத்தாபனதின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம்.செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

ஏழு தசாப்தங்களுக்கு மேலாக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை சமாளிக்க இலங்கை IMF உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த தீர்மானங்கள் எட்டப்பட்ட பின்னர் 3-4 ஆண்டுகளில் நாம் செலுத்த வேண்டிய கடனை 10-12 ஆண்டுகளாக நீட்டிக்க முடியும் என்றும் செந்தில்நாதன் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் கடன் திட்டத்தை அங்கீகரித்து. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் \கடனை மறுசீரமைக்கத் தொடங்கவும் இது உதவியது. IMF ஆல் அங்கீகரிக்கப்பட்ட 48 மாத வேலைத்திட்டத்தின் தீவு நாடு சுமார் $333 மில்லியன் உடனடி கடனையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.