இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசுடனான உறவை தாம் முறித்துக் கொள்வதாக கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) அறித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு கொலம்பிய அரசு தொடர்சியாக கண்டனம் தெரிவித்து வந்த நிலையிலேயே,
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொகோட்டாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கொலம்பிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது எனவும் அனைத்து நாடுகளும் இது தொடர்பில் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கொலம்பியாவின் தொடர் கண்டனத்தையடுத்து கொலம்பியாவுக்கான பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தியது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.