இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியடையும் – ஆசிய அபிவிருத்தி வங்கி

0
10
Article Top Ad

2025 ஆம் ஆண்டில் காணப்பட்ட 5.0 சதவீத இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2026ஆம் ஆண்டில் 4.0 சதவீதமாக வீழ்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மோதலானது, அபிவிருத்தியடைந்து வரும் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆசிய அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது.

2026ஆம் ஆண்டில் ஆரம்பநிலையில் ஸ்திரத்தன்மை நிலவினால், பிராந்திய வளர்ச்சியானது 2026 மற்றும் 2027 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் 5.1 சதவீதமாக அமையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதிகரித்துள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் உற்பத்திச் செலவுகளையும் நுகர்வோர் விலைகளையும் உயர்த்தும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

என்றாலும், கடந்த ஆண்டில் ஏற்றுமதி நடவடிக்கைகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் பொருளாதாரத்தில் சில வளர்ச்சிகளை காண முடியும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி கூறியுள்ளது.

2027 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 4.2 சதவீதமாகச் சிறியளவில் அதிகரிக்கும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது.

இதேவேளை, பணவீக்கமானது 2026 ஆம் ஆண்டின் இறுதியில் 5.2 சதவீதம்வரை உயர்வடைய வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here