Tuesday, 10 November 2026
நாணய மாற்று 🍁 1 CAD
  • Rs LKR 235.59 ■ 0.00%
  • ₹ INR 66.56 ■ 0.00%
  • $ USD 0.7086 ■ 0.00%
  • € EUR 0.6321 ■ 0.00%
  • £ GBP 0.5278 ■ 0.00%
  • A$ AUD 1.0265 ■ 0.00%
புதுப்பிப்பு: 2026-11-10 13:58
வானிலை
16°C
தெளிவான வானம்
▲ 17° ▼ 6°
  • உணர்வு11°
  • ஈரப்பதம்49%
  • காற்று27 km/h
அண்மைச் செய்திகள்
கனடாவின் புதிய வரவு செலவுத் திட்டம் : பொருளாதாரத்தை வலுப்படுத்த 142.1 பில்லியன் டொலர் ஒதுக்கீடு கனடாவின் குடியேற்றத் திட்டத்தில் அதிரடி மாற்றம் : அதிக ஊதியம் பெறும் திறமையான தொழிலாளர்களுக்கு கூடுதல் புள்ளிகள் ரஷ்யாவின் இராணுவ வலிமையைக் குறைக்க புதிய தடைகளை அறிவித்த கனடா கனடாவின் பிராம்ப்டன் கார் தொழிற்சாலை விற்பனை : 2,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி கனடாவில் வேலையின்மை விகிதம் ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு – இளைஞர்கள் அதிகம் பாதிப்பு கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற புதிய வாய்ப்பு: யார் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதிகள் தேவை? Canada Announces New Permanent Residence Pathway: Opportunities for Skilled Workers and International Graduates ஸ்கார்பரோ நோர்த் இடைத்தேர்தல்: லிபரல் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் லியின் தேர்தல் பிரசாரம் பெருந்திரளான ஆதரவாளர்களுடன் ஆரம்பம்! Strong Turnout as Liberal Candidate James Li Launches Campaign for Scarborough North By-Election ஈரானிய சினிமாவுக்கு இணையாகப் பெருமை பேச நம்மிடமும் ஒரு ‘பத்தா’!”
பிரத்தியேகம்Canada

கனடாவின் பிராம்ப்டன் கார் தொழிற்சாலை விற்பனை : 2,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

பகிர்FacebookWhatsAppXTelegram

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், பிராம்ப்டனில் அமைந்துள்ள வாகன உற்பத்தித் தொழிற்சாலையை கவச வாகனங்களைத் தயாரிக்கும் கனேடிய நிறுவனமான Roshel நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு Stellantis நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

நீண்டகாலமாகச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்த இந்தத் தொழிற்சாலையின் விற்பனை, கனடாவின் வாகன உற்பத்தித் துறையிலும் அங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு எதிர்காலத்திலும் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த நவம்பர் 9ஆம் திகதி Stellantis நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தொழிற்சாலையையும் அதனுடன் தொடர்புடைய உற்பத்தி உபகரணங்களையும் Roshel நிறுவனம் கொள்வனவு செய்யவுள்ளது. எனினும், விற்பனைத் தொகை வெளியிடப்படவில்லை. இந்தப் பரிவர்த்தனை 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அரசாங்க மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகளும் இதற்குத் தேவையாக உள்ளன.

👉தொழிற்சாலை மூடப்பட்ட பின்னணி

பிராம்ப்டனில் உள்ள இந்தத் தொழிற்சாலையில் 2023ஆம் ஆண்டு உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. ஜீப் நிறுவனத்தின் புதிய Jeep Compass வாகனங்களைத் தயாரிப்பதற்காக தொழிற்சாலையை நவீனமயப்படுத்தும் பணிகள் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும், 2025ஆம் ஆண்டில் அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. பின்னர் Jeep Compass உற்பத்தியை அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்திலுள்ள தொழிற்சாலைக்கு மாற்ற Stellantis தீர்மானித்தது. இதனால் பிராம்ப்டன் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான எதிர்பார்ப்புகள் பாதிக்கப்பட்டன.

தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கத்துக்கு உள்ளாகினர். இவர்களில் சுமார் 2,200 பேர் தொடர்ந்தும் Unifor தொழிற்சங்க உறுப்பினர்களாக உள்ளனர்.

👉தொழிற்சங்கத்தின் கடும் எதிர்ப்பு

Stellantis நிறுவனத்தின் இந்த விற்பனை முடிவுக்கு கனடாவின் முக்கிய தொழிற்சங்கமான Unifor கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தொழிற்சங்கத்தின் தேசியத் தலைவர் லானா பெய்ன், தொழிற்சாலையை விற்பனை செய்வதன் மூலம் கனடாவின் வாகன உற்பத்தித் திறன் பாதிக்கப்படுவதுடன், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளும் மீறப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கையைத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என அவர் விமர்சித்துள்ளார். மேலும், கனடாவின் வாகனத் தொழில்துறைக்கான தேசியத் திட்டத்திற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Stellantis நிறுவனத்துடன் தொழிற்சங்கம் மேற்கொண்டு வந்த கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளும் பல முக்கிய விடயங்களில் முட்டுக்கட்டையை எதிர்கொண்டுள்ளன. கடந்த மாதம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற தொழிற்சங்க உறுப்பினர்களில் 97.3 சதவீதமானோர் வேலைநிறுத்தத்திற்கு அனுமதி வழங்க ஆதரவு தெரிவித்திருந்தனர்.

எனினும், வேலைநிறுத்தம் இறுதிக்கட்ட நடவடிக்கையாகவே இருக்கும் என லானா பெய்ன் குறிப்பிட்டுள்ளார்.

👉மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்குமா?

இதற்கிடையில், தொழிற்சாலையைப் பொறுப்பேற்கவுள்ள Roshel நிறுவனம், அங்கு மேம்பட்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்கான மையமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

தொழிற்சாலை மீண்டும் செயல்படத் தொடங்கும்போது, பணிநீக்கம் செய்யப்பட்ட Stellantis தொழிலாளர்களில் சுமார் 700 முதல் 1,000 பேருக்கு Roshel நிறுவனத்தின் கீழ் மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடும் என Global News தெரிவித்துள்ளது.

மேலும், தொழிற்சாலையின் சுமார் நான்கில் ஒரு பகுதி இடத்தை Stellantis நிறுவனத்திற்கு மீண்டும் குத்தகைக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட அளவிலான வாகன உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.

Roshel நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரி ரோமன் ஷிமோனோவ், இந்தத் தொழிற்சாலையில் மேம்பட்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்கான சிறப்பு மையத்தை உருவாக்கி, கனடாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தித் திறனை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

👉அரசாங்கத்தின் நிலைப்பாடு

இந்த விற்பனை முடிவு தொடர்பில் கனடாவின் தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி கருத்துத் தெரிவிக்கையில், Stellantis நிறுவனம் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளிலிருந்து இந்த விற்பனை விடுவிக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களுக்கு உரிய பதில்களும் மரியாதையும் பாதுகாப்பான எதிர்காலமும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், Stellantis நிறுவனம், Unifor தொழிற்சங்கம், ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய கலந்துரையாடலொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிற்சாலையின் உற்பத்தி தொடர்பாக அரசாங்கம் வழங்கிய நிதி உதவிகளுக்கான நிபந்தனைகளை Stellantis நிறுவனம் நிறைவேற்றத் தவறினால், அரச நிதியை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

பிராம்ப்டன் நகர மேயர் பெட்ரிக் பிரவுனும் இந்த விற்பனை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், உள்ளூர் நிறுவனமொன்று தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பை வரவேற்றுள்ளார். அதேவேளை, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வும் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்து

Your email address will not be published. Required fields are marked *