அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெறப் போவதாக ரோஸ் டெய்லர் அறிவிப்பு!

0
209
Article Top Ad

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த துடுப்பாட்ட வீரரான ரோஸ் டெய்லர், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெறப் போவதாக ரோஸ் டெய்லர் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன், 37 வயதான ரோஸ் டெய்லர், ஓய்வுப் பெறுவார்.

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான அடுத்த டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் மற்றும் கோடையின் பின்னர் அவுஸ்ரேலியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார்.

டெய்லரின் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரரால் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய டேனியல் வெட்டோரியுடன் ரோஸ் டெய்லர் இணைந்துள்ளார். டேனியல் வெட்டோரி 112 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவுத்தாம்ப்டனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ரோஸ் டெய்லர், சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.

தனது ஓய்வு குறித்து ரோஸ் டெய்லர் கூறுகையில், ‘இது ஒரு அற்புதமான பயணம். நான் இருக்கும் வரை எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியது நம்பமுடியாத அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.

விளையாட்டின் சில சிறந்த வீரர்களுடன் விளையாடுவதும், அவர்களுக்கு எதிராக விளையாடுவதும், பல நினைவுகளையும் நட்பையும் உருவாக்கியதும் ஒரு பாக்கியம்.

ஆனால், எல்லா நல்ல விடயங்களும் முடிவுக்கு வர வேண்டும். நேரம் எனக்கு சரியானதாக இருக்கிறது. எனது குடும்பத்தினர்,

நண்பர்கள் மற்றும் எனக்கு இந்த நிலைக்கு வர உதவிய அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்’ என கூறினார்.

ரோஸ் டெய்லர் இதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 இரட்டை சதங்கள், 19 சதங்கள் 35 அரைசதங்கள் அடங்களாக, 7,585 ஓட்டங்களை குவித்துள்ளார்.

233 ஓருநாள் போட்டிகளில் விளையாடி 21 சதங்கள், 51 அரைசதங்கள் அடங்களாக 8,576 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அத்துடன், 102 ரி-20 போட்டிகளில் விளையாடி 7 அரைசதங்கள் அடங்களாக 1,909 ஓட்டங்களை குவித்துள்ளார்.