ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: அடுத்தது என்ன? (விளக்கம் )

0
190
Article Top Ad

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கை புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான வழக்கு புத்தளம் மேல் நீதிமன்றத்தில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜனவரி 20ம் திகதி ,சட்டமா அதிபர் திணைக்களம் பிணைக் கோரிக்கைக்கு இணங்கியபோதும் ஹிஜாஸின் பிணைக்கோரிக்கையை இன்று நிராகரித்திருந்த புத்தளம் மேல் நீதிமன்றம்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு பிணைவழங்குவதற்கான நியாயாதிபத்தியத்தை தமது நீதிமன்றம் கொண்டிருக்கவில்லை எனத்தெரிவித்ததுடன் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்பாக பிணைக்கோரிக்கையை முன்வைக்குமாறு கூறியிருந்தது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி  கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 20 மாதங்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு நிபந்தனையுடன் கூடிய பிணைவழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்போவதில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் வெளிப்படுத்தியிருந்ததையடுத்து இன்றையதினம் ஹிஜாஸிற்கு பிணை வழங்கப்படலாம் என்ற நம்பிக்கை வலுவடைந்திருந்தது.

இன்றையதினமும் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் பிணைக் கோரிக்கை முன்வைக்குமாறு புத்தளம் நீதவான் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி அடுத்தமாதம் ( பெப்ரவரி) 9ம்திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பாக பிணைக் கோரிக்கையை அவரது சட்டத்தரணிகள் முன்வைக்கவுள்ளனர் .

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஏன் கைதுசெய்யப்பட்டார்?

ஈஸ்டர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு உதவியமைக்காக அவர் கைதுசெய்யப்பட்டார் என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சில சமவாயகத்தின்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் சிவில் மற்றும் அரசியல் உரிமை சர்வதேச சமவாய கட்டளைச்சட்டத்தின் கீழும் குற்றஞ்சாட்டப்படக்கூடிய வகையில் மாணவர்களுக்கு சில தகவல்களைப் பரிமாறியதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பிணை வழங்கப்படவாய்ப்புண்டா?

சட்டமா அதிபர் திணைக்களம் பிணைக்கு இணக்கம் தெரிவித்த நிலையில் இன்றையதினமே பிணை வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெப்ரவரி 9ம்திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்

பிணை வழங்கப்படுவதற்கான பின்னணி என்ன?

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 20 மாதங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச மன்னிப்புச்சபை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியன தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றன.

இந்த அழுத்தம் காரணமாக ஏற்கனவே தடுப்பில் இருந்த அஸாத் சாலி ,கவிஞர் அனாவ் ஜஸீம் ஆகியோர் உட்பட பலருக்கு பிணை வழங்கப்பட்டது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை தொடர்பான மதிப்பீடு மார்ச் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக இலங்கை அரசாங்கம் சில நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றமை அண்மைய செயற்பாடுகளில் இருந்து புலனாகின்றது.பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளத்திருத்தியமைக்கும் செயற்பாடுகளும் இதில் ஒரு அங்கமாக பார்ப்படுகின்றது.