Article Top Ad
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான பிரசாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்கள் முன்னெடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற அணியில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக்க ஒரு தரப்பினர் செயற்பட்டு வருவதாகவும், ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலமான ஒருவர் முயற்சிப்பதாகவும், அதற்காக வாக்குகளைப் பயன்படுத்தும் எம்.பி ஒருவருக்கு 50 கோடி ரூபாவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியாகும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற அணியுடன் இதற்கான கலந்துரையாடலை நடாத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.