மனோ, ஹக்கீம் அழகப்பெருமவுக்கு ஆதரவு!

0
175
Article Top Ad

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி ஏகமனதாக தீர்மானித்ததாக, அதன் தலைவர் மனோ கணேசன் எம்.பி., நுகேகொடவில் உள்ள கட்சி செயலகத்தில் நடைபெற்ற கட்சியின் தலைமைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கும் வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.