சர்வதேச நாணய நிதிய கூட்டத்தொடர் ; இலங்கைக்கு சீனா ஆதரவு

0
145
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்தில் சீனா அங்கத்துவம் பெற்றுள்ளதால்,பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனத் தூதுவர் சி ஷெங்ஹாங் வலியுறுத்தியுள்ளார்.

பணிப்பாளர் சபை கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு சீனா வழங்கும் ஆதரவை பாராட்டிய பிரதமர், நீண்ட கால தீர்வாக, நேரடி தனியார் முதலீடுகள் மற்றும் விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கைத்தொழில் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.