இலங்கை அணியை தோற்கடித்து 7வது முறையாகத் தோற்கடித்த இந்திய மகளிர் கிரிக்கட் அணி

0
160
Article Top Ad

 

 

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி 7 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை இந்திய அணி தனதாக்கி கொண்டுள்ளது.

ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக் கொண்டன.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் இனேக்கா ரணவீர ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதனடிப்படையில் இந்திய அணிக்கு 66 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்ப்பில் ஸ்மிர்த்தி மந்தனா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.