சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் மூழ்கிவிட்டதாக அறிவிப்பு

இந்தோனேசிய கடற்படையின் நீர்மூழ்கிப் படையணியிலுள்ள 5 நீர்மூழ்கிகளில் ஒன்றாக இது அமைந்தது. 2010ம் ஆண்டிற்கும் 2012ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நீர்மூழ்கி தென் கொரியாவில் மீளப் புதுப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0
338
Article Top Ad

மூன்று நாட்களுக்கு முன்னர் காணமற் போனதையடுத்து பலரும் அஞ்சியதை நிஜமாக்கும் வகையில் இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அது மூழ்கிவிட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போன நீர்மூழ்கிக்கப்பலிலிருந்து சிதைவுகளை தேடற்பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளதாக இன்று சனிக்கிழமை இந்தோனேசிய கடற்படையினர் அறிவித்திருந்தனர்.

Picture courtesy : AP

இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாலி தீவு அருகே அந்த நாட்டு இராணுவத்துக்கு சொந்தமான ‘நங்கலா 402’ என்கிற நீர்மூழ்கி கப்பல் கடந்த 21ம் திகதி வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

இந்த நீர்மூழ்கி கப்பலில் ராணுவ 53 வீரர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் பாலி தீவிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த நீர்மூழ்கி கப்பல் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.

42 ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி இந்தோனேசிய கடற்படையில் 1981ம் ஆண்டில் இணைத்துக்கொள்ளப்பட்டது .

இந்தோனேசிய கடற்படையின் நீர்மூழ்கிப் படையணியிலுள்ள 5 நீர்மூழ்கிகளில் ஒன்றாக இது அமைந்தது. 2010ம் ஆண்டிற்கும் 2012ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நீர்மூழ்கி தென் கொரியாவில் மீளப் புதுப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது